நான் உங்களுக்கு உறுதியாக நிற்பேன் - பரந்தூரில் தவெக தலைவர் விஜய்.!
tvk leader vijay speech in paranthur
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று சந்திக்க அனுமதி அளித்தனர். அதன் படி இன்று விஜய் போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உங்கள் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு உங்களை சந்திக்க வந்தேன். கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் ராகுல் பேசியதை கேட்டு மனம் ஏதோ செய்தது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு எனது முழு ஆதரவு உண்டு. நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்.
ஓட்டு அரசியலுக்காக இயற்கை வள பாதுகாப்பு பற்றி நான் பேசவில்லை. பரந்தூரில் 1000 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டத்தை கைவிடுக. விவசாயத்திற்கு எதிரான திட்டத்தில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன் என்று தெரிவித்தார்.
English Summary
tvk leader vijay speech in paranthur