இவ்வளவு ரிஸ்க் எடுத்து சூரி நடிச்ச விடுதலை படத்துக்கு வாங்கின சம்பளம் இவ்வளவா.?! - Seithipunal
Seithipunal


காமெடி நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த 31ஆம் தேதி வெளியாகியது. இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி  இந்தத் திரைப்படத்தில் முதல் முதலாக கதையின் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார் சூரி.

தற்போது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சூரி வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த செய்திகளின்படி இரண்டு பாகங்களிலும் சேர்த்து இந்தப் படத்திற்கு சம்பளமாக 40 லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார். இது அவர் காமெடி நடிகனாக வாங்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவு. முதல்  முறை ஹீரோவாக நடிப்பதால்  சம்பளத்தை குறைவாக வாங்கி இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விடுதலைப் படத்தினை தொடர்ந்து  மேலும் மூன்று திரைப்படங்களிலும்  ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் சூரி. விடுதலை படத்தின் வெற்றி சூரியை ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும்  தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soori gets very low salary to act in viduthalai film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->