அலப்பறை ஐஸ்வர்யாவுக்கு இவ்வுளவு பெரிய மகளா?.. இணையத்தை கலக்கும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் லட்சுமி. இவரது மகள் ஐஸ்வர்யா, கடந்த 1989 ஆம் வருடம் தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இதன்பின்னர், சில தெலுங்கு மற்றும் மலையாள படத்தில் நடித்தார். 

பின்னர், தமிழ் மொழியில் நியாயங்கள் ஜெயிக்கும் என்ற படம் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தாலும் அது அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாள படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். 

ஆறு படத்தில் சரோஜா கதாபாத்திரம் பெருமளவில் மக்களால் பேசப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் நடுவராக தற்போது இருக்கும் ஐஸ்வர்யா, கடந்த 1994 ஆம் வருடம் தன்வீர் அஹ்மத் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு அனன்யா என்ற மகள் இருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் ஆகிய 1 வருடத்திலேயே பிரிவை சந்தித்ததால், மகளின் முகத்தை வெளி உலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார். தற்போது மகளுடன் சேர்ந்து எடுத்த வீடியோவை ஐஸ்வர்யா இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட பலரும் உங்களுக்கு இவ்வுளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sound Saroja Aiswarya daughter video with mom


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->