பிக்பாஸ் 8-ல் சௌந்தர்யா சொன்ன 17 லட்சம் ஸ்கேம்.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு! சௌந்தர்யாக்கு கூடும் ரசிகர்கள் ஆதரவு! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் சௌந்தர்யா, தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக, 17 லட்சம் ரூபாயை இழந்த சம்பவத்தை எடுத்துரைத்தார். இதன் மூலம் பார்வையாளர்களிடம் சிம்பதி கேரியட் செய்ய முயற்சி செய்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், தற்போது அவர் சொல்வது உண்மையிலேயே நடந்த சம்பவம் என உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தின் பின்னணி: சௌந்தர்யா மார்ச் மாதத்தில் தனது தோழிகளுடன் சிம்லாவுக்கு பயணம் சென்றிருந்தார். திரும்பியபோது, ட்ரெயினில் அவர் தனது செல்போனை சார்ஜ் செய்ய பொதுவான இடத்தில் வைத்திருந்தார். அப்போது, ஓர் ஆடவர் அவரது போனைப் பறித்துக் கொண்டு ஓடியதாக கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் டெல்லி போலீசில் புகார் செய்தார். 

அதில் அதுவும் உச்சமாக, சில மாதங்களுக்கு பிறகு சௌந்தர்யாவுக்கு ஒரு விசித்திரமான வீடியோ கால் வந்தது. அந்தக் காலில் பேசியவர் போலீஸ்காரர் போல் தன்னை அறிமுகப்படுத்தி, அவரது நம்பர் மூலம் சில முக்கிய தகவல்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறி விசாரணை மேற்கொள்ள வேண்டியதென கூறினார். விசாரணை நம்பிக்கையில், அவர் ஆதார் கார்டு நம்பரையும் வழங்கினார்.

ஆனால், சில நிமிடங்களிலேயே அவரது வங்கி கணக்கிலிருந்து 17 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. பின்னர் அவர் இதற்கான புகாரை போலீசில் பதிவு செய்தார், மேலும் இது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இந்தச் சம்பவம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், இந்தியாவில் கணினி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியத்தையும் வலியுறுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soundarya 17 lakh scam in Bigg Boss 8 The event that Pillaiyar put a spin on the problem Fans support Soundarya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->