''ஸ்டார்'' திரைப்படத்தின் வசூல்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்.! - Seithipunal
Seithipunal


டாடா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் தற்போது இளன் இயக்கத்தில் ''ஸ்டார்'' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

இருப்பினும் இந்த திரைப்படம் முதல் நாள் ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் 3 நாட்கள் முடிவில் உலக அளவில் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் நடிகரான கவின் நடித்த 4 வது திரைப்படத்திலேயே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளது திரை பிரபலங்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Star movie Collection Update Released


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->