அறையை சுத்தம் செய்யவில்லை.. வார்டன் ஆபாச பேச்சு.. விஷம் குடித்து மாணவி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் பகுதியில் வடுக பாளையம் பகுதியில் லாவண்யா என்ற 17 வயது மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அங்கிருக்கும் விடுதியில் தங்கி மாணவி படித்து வந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி லாவண்யா விடுதியில் இருக்கும் பொழுது விடுதி பாதுகாப்பாளினி ஒவ்வொரு அறையாக பரிசோதனை செய்து வந்துள்ளார். அப்பொழுது லாவண்யா இருக்கும் அறை சுத்தமாக இல்லை என்பதால் அறையை சுத்தம் செய் என்று மிகவும் கோபமாக திட்டியுள்ளார். 

எனவே, மனமுடைந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அருகிலிருந்த மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மேலும், காவல் துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு காவல்துறை நடத்திய விசாரணையில் தன்னை வேலை செய்யுமாறு கூறியதால் மனமுடைந்து மருந்து கொடுத்து விட்டதாக லாவண்யா தெரிவித்துள்ளார். 

சிகிச்சை பலனின்றி நேற்று லாவண்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student suicide for warden harassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->