மும்பையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தீவிர சோதனையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் உள்பட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி-ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருளும் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றுத் தெரிவித்தார். 

ஏற்கனவே தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றுக் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb thread to schools in mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->