மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப்போவது யார்? - படக்குழு அதிரடி அறிவிப்பு.!
sundar c direct mookuththi amman 2 movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் 'மூக்குத்தி அம்மன்'. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி தானே கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி.
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதிலும் நயன்தாராதான் அம்மனாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
இதையடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பக்கத்தை ஆர்.ஜே. பாலாஜியே இயக்குவாரா? இல்லை வேறு ஒரு இயக்குனர் இயக்குவாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குவார் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் இந்தப்படம் உருவாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக நயன்தாரா, நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும், யாஷுடன் 'டாக்சிக்' படத்திலும் நடித்து வருகிறார்.
English Summary
sundar c direct mookuththi amman 2 movie