திடீரென ட்விட்டரில் டிரெண்டாகும் சுந்தர்சி.. இது தான் காரணமா.?! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் சுந்தர்.சியின் பெயர் திடீரென ட்விட்டரில் வைராலாகி வருகின்றது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கும் படம் தான் ‛காபி வித் காதல்'. இதில் நடிகர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், யோகிபாபு மற்றும் நடிகைகள் மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர்,  சம்யுக்தா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் ரைசா வில்சன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

நகைச்சுவை மற்றும் காதலை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

முக்கியமாக ‛மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற ரம் பம் பம் பாடலை ரீ-கிரியேட் செய்து வெளியிட்டனர். ஷூட்டிங் முழுதும் முடிந்து மற்ற பணிகள் செம்மையாக நடைபெற்று வந்தன. தற்பொழுது, இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.

அதன்படி, உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 7ம் தேதி படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடவுள்ளது. இதற்கான அறிவிப்பை உதயநிதி வெளியிட்ட நிலையில், தற்போது #sundarC என்ற டேக் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sundhar C tag Viral on Twitter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->