ரஜினிக்கு இது தான் கடைசி படம்.! வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ்  தயாரிக்கும் இந்த திரைப்படத்தை  நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார்.

இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய தா சே ஞானவேல்  இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க  இருப்பது உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் விரைவிலேயே தனது கடைசி படத்தை  பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இறுதியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரிய தோல்வியை தழுவியது.

இதனால் மிகப்பெரிய ஒரு வெற்றியோடு  தன்னுடைய சினிமா வாழ்விலிருந்து ஓய்வை அறிவிக்க சூப்பர் ஸ்டார் திட்டமிட்டிருப்பதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காந்தாரா திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைத் தொடர்ந்து  அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ரிஷப் செட்டியை சமீபத்தில் அழைத்து பாராட்டியிருந்தார் சூப்பர் ஸ்டார்.

மேலும் சூப்பர் ஸ்டாரின் கடைசி படத்தை ரிஷப் செட்டி தான் இயக்கப் போகிறார் என தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும்  காந்தாரா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

superstar going to announce his last film and its director soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->