வெளிநாட்டு நடிகர்களால் சூர்யா 44 படத்திற்கு நேர்ந்த சிக்கல் - Seithipunal
Seithipunal


சூர்யாவின் 44-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் நிலையில்,, கருணாகரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.அந்தமானில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய நடிகர்கள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதில், சில ரஷ்ய நடிகர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும்,  ஒரு சில நடிகர்கள் நீலகிரியில் உள்ள   தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யாவின்  44 வைத்து படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் நடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதன்படி சுற்றுலா விசாவில் வெளிநாட்டவர்கள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, நீலகிரி மாவட்ட தனிப் பிரிவு போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya 44s trouble with foreign actors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->