'சூர்யா - 43' அரசியல் கதையா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 43 வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இதற்கு முன்னதாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான 'சூரரைப் போற்று' படத்தில் நடித்த சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்தது. 

இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சூர்யா 43 வது படத்தை 2d என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

மேலும் படத்திற்கு புறநானூறு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர். இருப்பினும் படத்தின் பெயர் அறிவிக்கவில்லை. 

இந்த வீடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், பழைய ரக துப்பாக்கிகள் போன்றவை இடம்பெற்றுள்ளதால் இந்த படம் அரசியல் மயமாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கதை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வருமா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya 43 political story


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->