நீரிழிவு நோயின் பரவல் ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை!
Kauvery Hospital releases data on prevalence of diabetes
காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கி வரும் உடல்நல பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நீரிழிவு நோய் குறித்த மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் முன்தடுப்பு உத்திகளின் அவசரத் தேவையை இந்த ஆய்வின் முடிவுகள் வலுவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பரணீதரன் K, இந்த ஆய்வின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியதாவது: "இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் நீரிழிவு நோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு தன்முனைப்புடன் கூடிய பரிசோதனைத் திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பொது சுகாதார முன்னெடுப்புகளின் அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. மேலும், சுகாதார பராமரிப்பு கொள்கைகளும், அரசாங்கத்தின் முயற்சிகளும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதிலும் மற்றும் அதன் மேலாண்மைக்கும் மிகவும் ஆதரவான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
இதன் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதாரவளங்களும், சுகாதார திட்டங்களும் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உடல் பருமனைத் தடுக்க கவனத்துடன் சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலமும், மன நலனை அக்கறையுடன் பேணுவதன் வழியாகவும் கவனிப்பதன் மூலமும் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்க வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என்று கூறினார்.
English Summary
Kauvery Hospital releases data on prevalence of diabetes