தி.மு.க. ஆட்சியில் தன்னம்பிக்கையும், தமிழ்நாடும் வளர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!!
chief minister mk stalin speach about central govt in thiruvallur ponneri
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2 லட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பேசியதாவது:- "பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி வருகிறோம். 10 ஆண்டுகால அ.தி.மு.க. இருண்ட ஆட்சியில் முடங்கிக்கிடந்த உட்கட்டமைப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரசின் அக்கறையான நிர்வாகத்தால் அனைத்து துறையிலும் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் தன்னம்பிக்கையும் தமிழ்நாடும் வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படாலம். ஆனால், தமிழ்நாட்டிற்கே எதிரிக்கட்சிகளாக செயல்படுகின்றன.
நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழி திட்டம் நிராகரிப்பு, வக்பு திருத்தச்சட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றுதிரட்டுதல் போன்றவற்றில் நாம்தான் இந்திய அளவில் வலுவாக குரல் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வில் விலக்கு தருவோம் என்று அமித்ஷா கூற முடியுமா? இந்தியை திணிக்கமாட்டோம் என்று கூற முடியுமா? தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி சீரமைப்பால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

எவ்வளவு கொடுத்தாலும் இங்கு அழுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார். மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநிலங்கள் பிச்சைக்காரர்களா? என்று நீங்கள் கூறியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். நாங்கள் கேட்பது அழுகையல்ல, தமிழ்நாட்டின் உரிமை.
தமிழ்நாடு தனித்தன்மை கொண்டது. 2026-லும் திராவிட மாடல் ஆட்சிதான். தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். அமித்ஷா அல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
chief minister mk stalin speach about central govt in thiruvallur ponneri