போலீசாரை பார்த்து தப்பியோடிய அஜித் பட நடிகர் - நடந்தது என்ன?
actor shine tom chacko escape after see police officer in kerala
கேரளா மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவு நேரத்தில் சோதனைக்குச் சென்றனர்.
அப்போது ஒருவர் ஓட்டலின் 3-வது மாடியில் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதையறிந்த போலீசார் அவர் யார்? என்று விசாரணை நடத்திய போது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க முடிவு செய்து உள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:- "நடிகர் ஷைன் டாம் ஓட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து அவரிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்கு மூலங்கள் பெறப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
actor shine tom chacko escape after see police officer in kerala