பிரதமர் மோடி, விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைப்பார்...!!! - அமைச்சர் வாசவன் உறுதி
Prime Minister Modi inaugurate Vizhinjam International Port Minister Vasavan confirms
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில், பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

இது தெற்கு ஆசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமாக விளங்கவுள்ளது.இதனை பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 2-ந் தேதி திறந்து வைக்கிறார்.
மேலும் இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் வாசவன்:
இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi inaugurate Vizhinjam International Port Minister Vasavan confirms