200 வெல்வோம் சரித்திரம் படைப்போம்..நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.மணி சபதம்!  - Seithipunal
Seithipunal


வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழக தலைவர் அறிவித்த "200 வெல்வோம் சரித்திரம் படைப்போம்"என ஏரியூர் ஒன்றிய திமுக  சார்பில் செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ.மணி பேசினார்.

தருமபுரி மாவட்டம் தருமபுரி  திமுக கிழக்கு மாவட்டம்  ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் என்.செல்வராஜ் அவர்களின் ஏற்பாட்டில் செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஏரியூர் ஆர்.என்.திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒன்றிய கழக துணை செயலாளர்கள் சம்பத்குமார்,சின்னு, சங்கீதா ஜனார்த்தனன், ஒன்றிய கழக பொருளாளர் சௌந்தர்ராஜன்  மாவட்ட பிரதிநிதிகள் சுப்பிரமணி, தனபாலன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 செயல்வர்களின் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் தங்களின் கருத்துரைகளை எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து  ஏரியூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட  ஊராட்சி குழு உறுப்பினருமான என். செல்வராஜ் கூட்டத் தீர்மானங்களை வாசித்தார்.

அதனை தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில விவசாய அணி துணை தலைவருமான பி என்பி இன்பசேகரன் கூட்டத்தில் பேசியதாவது :தனது தந்தை பி.என்.பெரியண்ணன் இந்த ஒன்றியத்திற்கு ஆற்றி கழக பணிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஏரியூர் ஒன்றியத்தில் செய்த பணிகளை பட்டியலிட்டார்,அதனை தொடர்ந்து தான் செய்த சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியை வென்றே தீருவோம் என தனது  சிறப்புரையில் தெரிவித்தார்.  

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில் கழக நிர்வாகிகள் அனைவரும் நாம் ஒன்றுபட்டு வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலில் கழக தலைவர் அறிவித்த "200 வெல்வோம் சரித்திரம் படைப்போம்"என்ற தாரக மன்றத்தை  200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வது நிச்சயம் அதில் பென்னாகரம் தொகுதியிலும் நிச்சயம் வெல்வோம் எனவும்  .வரும் சட்டமன்ற தேர்தலுக்கு  இப்பொழுது இருந்தே தேர்தல் பணி மேற்கொள்வோம் எனவும், பொதுமக்களிடம் கழக அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்குகளாக மாற்ற வேண்டும் எனவும் தன்னை கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் 24 மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட கழக பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஆ.மணி சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சி செல்வராஜ், மாவட்ட கழக துணை செயலாளர்கள். ஆறுமுகம் ரேணுகா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள்.ஏ. கருணாநிதி , வைகுந்தம் ஏ எஸ் சண்முகம் ,மடம் முருகேசன், மல்லமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், ஒன்றிய அவைத் தலைவர் ஸ்பீடு சரவணன் மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் துரைசாமி,கார்த்திக், பெருமாள், தென்னரசு , மல்லமுத்து, பிரபு, ராஜேந்திரன், சென்னையன், கோவிந்தராஜ், ரமேஷ், திருமுருகன், கிருஷ்ணன், புஷ்பராஜ், சரவணன், வெற்றிவேல், நாகராஜ், தொமுச. ராஜேந்திரன், ஏரியூர் கிளை செயலாளர்கள். சண்முகம், பரந்தாமன் , ஏரியூர் ஒன்றிய இளைஞரணி மகேஸ்வரன், சுரேஷ், மாதேஷ்குமார் , ஏரியூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி. சுப்பிரமணி, வீரமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தினை ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் என் செல்வராஜ் அவர்கள் தலைமையில் ஒன்றிய கழக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஏரியூர் ஒன்றிய கழக துணை செயலாளர்.எ.ஜி.சம்பத்குமார் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lets win 200 and make history Member of Parliament A Mani vows


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->