பிரபல தெலுங்கு நடிகர் ’காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா’ மறைவு!
telungu actor costumes krishna passed away
தெலுங்கு சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றிய ’காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா’ வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகபட்டினத்தை சேர்ந்தவர் ’காஸ்டியூம்ஸ் கிருஷ்ணா’. இவர் சினி உலகில் ’பாரத் பந்த்’ என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர், திரையுலகத்தில் ஆடை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
நாளடைவில், இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கிய "பாரத் பந்த்" திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக, உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக காலமானார்.
இந்த மறைவு செய்தியை கேட்டு தெலுங்கு திரையுலகினர் மட்டுமில்லாமல், தென்னக சினிமாவின் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
telungu actor costumes krishna passed away