05 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாற்றுக் கட்சிக்காரர்கள் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல்..!
It is reported that more than 5 thousand alternative party members have joined the DMK
மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.க.வில் 05 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நெய்வேலி நகரம் சி.பி.எஸ். அண்ணா திடலில் கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஏற்பாட்டில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க. இணைந்தனர்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
It is reported that more than 5 thousand alternative party members have joined the DMK