அண்ணாமலை மரியாதை, நாகரிகம் தெரியாதவர்; கீதாஜீவன் விமர்சனம்..!
Annamalai does not know respect and civility Geethajeevans criticism
அண்ணாமலை அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த வாய்க்கு வந்த கருத்துகளை கூறி வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.
.இது குறித்து கீதாஜீவன் கூறுகையில்; நேற்று கூட துணை முதலமைச்சரை அண்ணாமலை ஒருமையில் பேசி உள்ளார். அவருக்கு அரசியலில் மரியாதை மற்றும்நாகரிகம் தெரியாதவர், என்ன ஐ.பி.எஸ். படித்தார்? என்று தெரியவில்லை என்று பேசியுள்ளார்.
அத்துடன், தற்போது முதலமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் 'ஹேஷ்டேக்' பதிவு செய்துள்ளார். தனது கட்சியில் தான் முக்கியமானவர் என்பதை கட்சிக்காரர்களுக்கு காண்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதெல்லாம் நிச்சயமாக டிரெண்டிங் ஆகப்போவதில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai does not know respect and civility Geethajeevans criticism