வெளியானது தலைவர் 170 -ன் தரமான அப்டேட்.! - Seithipunal
Seithipunal


வெளியானது தலைவர் 170 -ன் தரமான அப்டேட்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றதுடன், வசூல் வேட்டையும் நடத்தியது. இந்த படம் நடிகர் ரஜினிக்கு நல்ல வரவேற்பை தந்ததையடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் பாடத்தில் இயக்குனர் ஞானவேல் ரஜினியை இஸ்லாமியராக நடிக்க வைக்க உள்ளார். 

ஜெய்பீமை போன்றே தலைவர் 170 படமும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக உள்ள நிலையில், தலைவர் 170 புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடவுபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை கொடுத்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்தார் ஞானவேல். அவர் சூர்யாவுக்கு செட்டாவார் ஆனால் மாஸ் ஹீரோவான ரஜினிக்கு ஒத்துவருவாரா? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivar 170 movie update


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->