விஜய்யின் 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
Thalapathi 68 official update
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 68வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்க உள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் விஜய்யின் 68 வது படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Thalapathi 68 official update