தளபதியின் கடைசி படத்தின் பெயர் என்ன? - வெளியானது மாஸ் அப்டேட்.!
thalapathy 69 movie name published
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் நடிக்கும் கடைசி படமான இந்தப் படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் 'அனிமல் மற்றும் கங்குவா' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் படத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
thalapathy 69 movie name published