அடேங்கப்பா.. விஜயை விட அவரது மனைவிக்கு தான் அதிக சொத்து இருக்கா..?! வெளியான வாயைப் பிளக்க வைக்கும் தகவல்..!! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருப்பவர் விஜய். இவர் 'தளபதி' என்று ரசிகர்களால் அழைக்கப் படுகிறார். 1992ம் ஆண்டு இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரம்பத்தில் பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது 1996ம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் தான். இதையடுத்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமா உலகின் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய், சமீபத்தில் 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  தொடர்ந்து இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விஜயைப் பிரிந்து சங்கீதா லண்டன் சென்று தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சங்கீதாவின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. விஜய் வாங்கிய பல்வேறு சொத்துக்கள் சங்கீதாவின் பெயரில் இருப்பதாகவும், எனவே விஜயை விடவும் அதிகமான சொத்துக்கள் தற்போது சங்கீதாவிடம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சங்கீதாவிடம் தற்போது 400 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே லண்டனில் ஒரு பிரபல வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் சங்கீதாவின் தந்தை, அங்கு கோடிக்கணக்கில் பல்வேறு சொத்துக்களை வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy Vijay Wife Sangeetha Net Worth is Higher Than Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->