தங்கலான் திரைப்படம் எப்போது ரிலீஸ் - வெளியானது மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் அமைத்துள்ளார். பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். 

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் முதலில் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர். ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை. இதனால், விக்ரம் ரசிகர்கள் தங்கலான் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படம் இந்த முறை சொன்ன தேதியில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thangalan release date announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->