ஆஸ்கர் விருது வென்ற தமிழ்நாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.!
The elephant whisperes movie won Oscar award
95-வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட 'தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
உலகளவில் சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த நிலையில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை ஜிம்மிக் கம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்தியாவின் 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆணவ குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் தெப்பக்காட்டில் காட்டு நாயக்கர் பழங்குடியினரான பொம்மன், வெள்ளி தம்பதியினர் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித் திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்து அந்த யானைக்கு ரகு என்ற பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் வளர்த்து வந்துள்ளனர்.
தாயைப் பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் பழங்குடியின தம்பதியின் கதையை 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படமாக உருவாக்கி இருக்கிறார் உதகையை சேர்ந்த இயக்குனர் கார்த்திக் கொன்சால்வ்ஸ். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றுள்ளது.
English Summary
The elephant whisperes movie won Oscar award