கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்' நாளை 37 நாடுகளில் ரிலீஸ்.!
The Kerala story movie release 37 plus countrys tomorrow
கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையே கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட ஒழுங்கு காரணமாக கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேரளா ஸ்டோரி திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரித்தார்.
இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கேரளா ஸ்டோரி திரைப்படம் 37க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை அடா சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் எங்கள் படத்தை பார்க்க போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி இந்த வார இறுதியில் கேரளா ஸ்டோரி திரைப்படம் 37க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
The Kerala story movie release 37 plus countrys tomorrow