சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய உலகநாயகன்! இவ்வளவு சம்பளமா? - Seithipunal
Seithipunal



தற்போது வெளியாகும் ஹீரோக்களின் படங்கள்  ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெறுவதோடு வசூரிலும் சாதனை படைத்து வருகின்றன. படங்களின் வெற்றி  வசூலில் மட்டும் சாதனை படைக்காமல் நடிகர்களின்  சம்பளங்களும் நல்ல விதத்தில்  உயர்வதற்கும் அவை காரணமாக அமைகின்றன. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்களை பற்றி நாம் பார்ப்போம்.

தளபதி விஜய் :

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய அளவில்  அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில்  முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லு அர்ஜுன் :
புஷ்பா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இவரது மார்க்கெட் வேல்யூ  உயர்ந்து  இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு  இவர் 75 முதல் 100 கோடி ரூபாய் சம்பளம்  வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த்:
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர்  திரைப்படத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் தோல்வியை தொடர்ந்து  இந்த படத்திற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக்கான் :

பானு ஓட சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்  பதான் திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது . உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்  இதுவரை ஓசூரில் சாதனை படைத்திருக்கிறது பதான். தற்போது ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் ஜமான் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்து திரைப்படத்தில் அவருக்கு சம்பளமாக 100 கோடி ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது .

மகேஷ் பாபு :

தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டார்  மகேஷ் பாபு  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான
சர்க்காரு வரி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு சம்பளமாக 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

பிரபாஸ் ;

ராஜமௌலி இயக்கத்தில்  பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழுக்கு சென்றவர்  பிரபாஸ் . இவர் பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம்  பான் இந்தியா ஹீரோவாக மாறினார். தற்போது ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி முதல் 150 கோடி ரூபாய் வரை  சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன்:
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனின் மார்க்கெட்  உச்சத்தை தொட்டிருக்கிறது. தற்போது இவர் சங்கரி இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார் உலக நாயகன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The list of highest paid actors in India is followed by Ulanganayakan Superstar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->