ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்ஜர்’ பட தோல்விக்கு இதுதான் காரணம் இசையமைப்பாளர் தமன் காரசார பேச்சு!
This is the reason for the failure of Shankar Game Changer Music composer Thaman fiery speech
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் - கியாரா அத்வானி நடிப்பில் வெளியான ‘கேம் சேஞ்ஜர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. சுமார் ₹450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், பாடல் காட்சிகளுக்கே ₹100 கோடி செலவாகியிருந்த நிலையில், கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
ஷங்கர் கூறிய காரணம்
ஷங்கர், 5 மணிநேர காட்சிகளை படமாக்கியிருந்த நிலையில், அதிலிருந்து 2.5 மணிநேரம் மட்டுமே திரையில் வந்ததால் படத்தின் பல முக்கியமான காட்சிகள் கத்தரிக்கத்திற்குப் பலியானதாக தெரிவித்தார்.
இசையமைப்பாளர் தமன் அதிரடி கருத்து
இப்போது, இசையமைப்பாளர் தமன் இதற்காக புதிய காரணம் ஒன்றை கூறியுள்ளார். ‘கேம் சேஞ்ஜர்’ படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் எளிதில் செய்யக்கூடிய ஹூக் ஸ்டெப்கள் இல்லாததே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடன இயக்குனரை குற்றம் சாட்டிய தமன்?
‘ஜருகண்டி’ பாடலுக்காக பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியிருந்தார். தற்போது தமன் கூறிய கருத்து, பிரபுதேவாவை நோக்கி கூறப்பட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
படத்தின் ₹200 கோடி நஷ்டம் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் எந்த காரணம் உண்மையானது என்பதை ரசிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
English Summary
This is the reason for the failure of Shankar Game Changer Music composer Thaman fiery speech