உலக சாதனை படைத்த நடிகை திரிஷாவின் ‘அத்தடு’ திரைப்படம்!
Actress Trisha movie world Record
மகேஷ் பாபு, த்ரிஷா இணைந்து நடித்த தெலுங்கு திரைப்படம் ‘அத்தடு’, 2005-ம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படம், சுவாரஸ்யமான பஞ்ச் வசனங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மற்றும் ஆழமான உணர்வுகள் கொண்ட கமர்ஷியல் கதையாக ரசிகர்களை கவர்ந்தது.
இந்த திரைப்படம் ஸ்டார் மா சேனலில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் உலகளவில் இவ்வளவு முறை ஒளிபரப்பாகவில்லை என கூறப்படுகிறது. தமிழ் ரசிகர்களுக்காக இந்த படம் ‘நந்து’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.
நடிகை த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’, அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 2005-ல் வெளியான ‘அத்தடு’ திரைப்படம் தொலைக்காட்சியில் அசாதாரண சாதனை படைத்து, மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
English Summary
Actress Trisha movie world Record