அதற்கான நேரம் வந்து விட்டது..அஜித் ரசிகர்கள் தயாராக இருங்கள்..ஜி.வி.உற்சாகம்!
The time has come Ajith fans be ready GV excited
நடிகர் அஜித் ரசிகர்கள் காலர் டியூன் மாற்றும் நேரம் வந்து விட்டது."என ஜிவி பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்திலும் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன், பிரசன்னா , அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நான் தற்பொழுது இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் 2 திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்து வருகிறேன். தற்பொழுது அதில் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் தீம் மியூசிக் இசையமைத்துள்ளேன், அவர்களின் ரசிகர்கள் காலர் டியூன் மாற்றும் நேரம் வந்து விட்டது."
இவர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தான் குறிப்பிட்டு கூறிகிறார் என நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
English Summary
The time has come Ajith fans be ready GV excited