படப்பிடிப்பின் போது திடீர் தீ விபத்து - நொடியில் உயிர் தப்பிய பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்கும் படம்  தி விர்ஜின் ட்ரீ. இந்தப்படம் காமெடி மற்றும் திரில் கலந்து உருவாகி வருகிறது. இதை த்ரீ டைமன்சன் மோசன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தின் கதாநாயகியாக நாகின் புகழ் நடிகை மவுனி ராய் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், சன்னி சிங் மற்றும் பாலக் திவாரி உள்ளிட்டோரும் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இடத்தில், நடிகை மவுனி ராய் இருந்துள்ளார். 

அங்கு திடீரென கேமரா வெடித்து தீ பரவியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் நடிகை மவுனி உயிர் தப்பி விட்டார். நிகழ்விடத்தில் இருந்த மற்ற யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பு சுமார் இரண்டு மணிநேரம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நெருப்பை அணைத்தனர். இருப்பினும், படத்திற்காக போடப்பட்ட செட் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு சேதமடைந்து விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the virjin tree movie shooting spot fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->