அப்படியா!!!என்னை ட்ரோல் செய்ய, என்னை கீழே தள்ள பணம் கொடுக்கிறார்கள்...!! - பூஜா ஹெக்டே - Seithipunal
Seithipunal


தளபதி விஜய்யுடன் 'ஜனநாயகன்', சூர்யாவுடன் 'ரெட்ரோ' ஆகிய படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.இவர் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பிரபாஸ், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற இந்திய திரை உலகில் பிரபல கதாநாயகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே தனக்கு எதிராக வரும் டிரோல்களுக்கும், கருத்துக்களுக்கும் தற்போது பதிலளித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது," பல முறை என்னை பற்றி டிரோல்கள் வந்துள்ளன. எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு காலத்தில் மீம்ஸ்களிலும், சமூக வலைதளங்களிலும் நான் தொடர்ந்து எதிர்மறையாக பேசுகிறார்களே என்று நினைத்திருக்கிறேன். பின்னர் நம்மை டார்கெட் செய்கிறார்கள் என தோன்றியது.

அது மட்டுமின்றி ஒருவரை சினிமாவிலிருந்து கீழே தள்ள சிலர் நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என புரிந்தது.எனக்கெதிரான டிரோல்களால் நானும் என் குடும்பத்தினரும் கடும் வேதனை அடைந்தோம். ஒரு கட்டத்தில் அதை ஒரு பாராட்டாகவும் எடுத்துக் கொண்டேன்.

ஏனெனில் யாராவது உங்களை கீழே பிடித்து தள்ள முயற்சிப்பதை உணர்ந்தால் நீங்கள் அவர்களுக்கு மேலே இருக்கிறீர்கள் என அர்த்தம்.என்னை பற்றி தவறாக டிரோல் செய்வதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள்.

இந்த தகவலை அந்த சமூக வலைதளபக்க நிர்வாகியே டிரோல்கள் பரப்ப சிலர் பணம் தருகிறார்கள் என என்னிடம் தெரிவித்தார்.மேலும் உங்கள் மீதான டிரோல்களை நிறுத்த வேண்டும் என்றால், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நான் ஏன் டிரோல் செய்யப்படுகிறேன் என்பது எனக்கு புரியவில்லை"எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They pay me to troll me to put me down Pooja Hegde


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->