18 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘துணிவு’ பட ட்ரெய்லர்.. யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதனிடையே துணிவு படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' மற்றும் 2வது பாடல் 'காசேதான் கடவுளடா' மற்றும் 3வது பாடல் 'கேங்ஸ்டா' பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் நிறைந்த துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இதுவரை 18 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu movie trailer 1.8 crore views on youtube


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->