குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்றே தனி  ரசிகர்கள் உள்ளனர். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இதுவரை கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன், கஜேஷ், ஆண்ட்ரியன் உள்ளிட்ட போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். ஆண்ட்ரியன் எலிமினேட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகிவிட்டதாக இணையத்தில் வேகமாக தகவல் பரவி வருகிறது. ஏனென்றால் வெங்கடேஷ் பட் சமீப நாட்களாக வெளிநாட்டில் இருந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதனால், அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாரா அல்லது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் சிலர் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர போகிறது எனவே, அவர் இந்த சீசனை முடித்து விட்டு தான் செல்வார் என்று கூறுகின்றனர். இது குறித்து வெங்கடேஸ் பட் விளக்கம் அளித்தால் தான் குழப்பம் நீங்கும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Top celebrity to quit Cook with Comali Shocked fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->