ரச்சின் ரவீந்திரா அசத்தல்; சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா, நியூசிலாந்து: வெளியேறிய பாகிஸ்தான், வங்கதேசம்..!
India and New Zealand advance to the Champions Trophy semi finals Pakistan and Bangladesh eliminated
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் -6 போட்டிகள் நடைபெறும்.
இதனடிப்படையில், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 02-வது போட்டியில் இந்தியா 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற 03 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 06 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 02 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 02 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்தது.
இன்று நடைபெற்ற 04-வது போட்டியில் வங்கதேசத்தை, நியூசிலாந்து வீழ்த்தியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 05-வது வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 06-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேசம் 50 ஓவரில் 08 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. 237 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி
46.1 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்றைய ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா 50 பந்தில் 06 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அதன் பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டிய ரச்சின், 95 பந்தில் 11 பவுண்டரி, 01 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 04-வது சதம் இதுவாகும். தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
English Summary
India and New Zealand advance to the Champions Trophy semi finals Pakistan and Bangladesh eliminated