தூத்துக்குடி: வீடு புகுந்து கூட்டு பாலியல் வன்கொடுமை! குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு!
kovilpatti harassment case police gun fire
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த மாரிச்செல்வம் என்ற இளைஞர் காவல்துறையினரால் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டியில் இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மாரிச்செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மாரிச்செல்வம் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிச்செல்வத்தை பிடிக்க முயன்றனர். அப்போது மாரிச்செல்வம் தப்பிச் செல்ல முயன்றதால் காவல்துறையினர் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். பின்னர் மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
English Summary
kovilpatti harassment case police gun fire