நீதிமன்றத்தால் திமுக ஆட்சி கவிழ்க்கப்படலாம் - எச்சரித்த கிருஷ்ணசாமி!
DMK Govt Hindi issue PT Krishnasamy
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் மாநில திட்டமும் அமைக்கப்பட வேண்டும். கல்வியில் எந்த விதமான மொழி திணிப்பும் இருக்கக்கூடாது, அது சாதி, மதம், இனம், மொழி என எந்தவித வேறுபாடும் இல்லாமல் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும், மும்மொழி கொள்கை என்ற பெயரில் திமுக அரசு ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கட்டாயம் விதிக்கிறது. தனியார் பள்ளிகளில் இது நடைமுறைக்கு வருவதில்லை. இந்தி மொழி திணிப்பு இல்லை என்றாலும், அரசுப் பள்ளிகளில் கல்வி பெறும் மாணவர்களுக்கு இந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மறுப்பது திமுக அரசின் வேடிக்கையான அரசியல் என்றார்.
மத்திய அரசு பாடத்திட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மட்டுமே இந்தி மொழி இடம்பெறும், அதற்கு மேல் கட்டாயமில்லை. பல மொழிகளை அறிந்தால்தான் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், திமுக அரசு மாணவர்களின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டை கிருஷ்ணசாமி முன்வைத்தார்.
இது சம்மந்தமாக யாரேனும் நீதிமன்றம் சென்றால், 2026ம் ஆண்டுக்கு முன்பே திமுக அரசு வீழ்ச்சி அடையும் வாய்ப்புள்ளது என்றும், திமுகவும் அதிமுகவும் அரசியல் நாடகங்கள் மூலம் கல்வியை பயன்படுத்துவதாகவும் அவர் கண்டனம் கிருஷ்ணசாமி தெரிவத்தார்..
English Summary
DMK Govt Hindi issue PT Krishnasamy