கன்னட நடிகர் புனித ராஜ்குமாருக்கு 23 அடி உயரத்தில் திருவுருவச் சிலை.! - Seithipunal
Seithipunal


கன்னட திரையுலகின் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். முன்னணி நடிகரான இவரை கன்னட மக்கள் பவர் ஸ்டார் மற்றும் அப்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர். 

இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி நடைபயிற்சி சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மட்டுமல்லாமல்,  ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் மூழ்கடித்தது. 

இவர் ஏழை, எளிய மக்களுக்கும், ஆதரவற்றோருக்கும் பல்வேறு உதவிகளையும் நலத்திட்டங்களையும் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவரை கவுரவப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு "கன்னட ரத்னா விருதை" அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பல்லாரி டவுனில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அவரது முழு உருவ சிலையை நிறுவுவதற்கு  அவருடைய ரசிகர்கள் முடிவு செய்தனர். 

அதன்படி, 22 லட்சம் ரூபாய் செலவில் அவரின் 23 அடி உயர சிலையை சிவமொக்கா மாவட்டம் நிதிகே கிராமத்தில் பிரபல ஜீவன் சிற்ப கலா குழுவை சேர்ந்த 15 சிற்பிகள் அடங்கிய குழுவினர் மூன்று மாதங்களாக வடிவமைத்தனர். 

இந்த சிலை லாரி மூலம் பல்லாரிக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டு, அதன்படி 20 சக்கர லாரியில் நேற்று புறப்பட்ட, இந்த சிலை வருகிற 21-ந்தேதி பல்லாரியில் நிறுவப்பட உள்ளது.

இதனை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு திறந்துவைக்கிறார். இந்த விழாவில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித்ராஜ்குமார், சகோதரர் சிவராஜ்குமார் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty three feet statue at actor punith rajkumar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->