ஜார்கண்டில் சிக்னல் தொடர்பு காரணமாக இரு ரயில்கள் மோதல்..!!! - மூன்று பேர் உயிரிழப்பு
Two trains collide Jharkhand due to signal failure Three killed
இன்று அதிகாலை 3.30 மணியளவில், ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். இதில் ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் பற்றி வெளியான தகவலின்படி, நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதில் 2 ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது.
இதில் சரக்கு ரெயில்களில் ஒன்றில் விபத்தினால் தீப்பிடித்து கொண்டது. தீயைஅணைக்க மீட்பு அதிகாரிகள் விரைந்து வந்தனர்.இந்த விபத்தில், 5 ரெயில்வே ஊழியர்கள் வரை காயமடைந்து இருக்க கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Two trains collide Jharkhand due to signal failure Three killed