வருகிற 10-ந்தேதி பங்குனி உத்திரம்..தென் மாவட்டங்களில் ஆடுகளின் விற்பனை அமோகம்!
Panguni Uthiram on the 10th. Sales of goats in southern districts
பங்குனி உத்திரத்தையொட்டி ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.
இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.தென் மாவட்டங்களில் பங்குனி உத்திரத்தையொட்டி இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் கோவில்களில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு, கிடாய் உள்ளிட்டவற்றை பலியிடுவார்கள். இந்த திருவிழா நெருங்கி வருவதால், இன்று நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.
இதற்காக வியாபாரிகள் தங்களது ஆடு, மாடுகளுடன் நேற்று இரவு முதலே சந்தைக்கு வந்தனர். இதையடுத்து ஆடு, மாடுகளை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் சந்தையில் குவிந்தனர். அப்போது சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காககொண்டு வரப்பட்டன. இதையடுத்து விற்பனையானது நடைபெற்றது.தரத்துக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. கிடா வகை ஆடுகள் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது . கோவில்களில் நேர்த்திக்கடனாக கிடா பலியிடுவார்கள் என்பதால் அதற்கு மவுசு அதிகமாக இருந்தது.
மேலும் இளம் ஆடுகளின் விற்பனையும் அமோகமாக இருந்தது .இதனை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை கோடிக்கணக்கில் அமோகமாக நடந்ததால் மேலப்பாளையம் சந்தை களைகட்டி காணப்பட்டது.
English Summary
Panguni Uthiram on the 10th. Sales of goats in southern districts