ராகுல் காந்தி தலைமையில் நாளை காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம்...! ஏன்?
Congress MP meet tomorrow under leadership Rahul Gandhi
வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அந்த மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் தெரிவிக்கின்றனர்.அதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு, பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் 4-ந் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.
இதனிடையே ,புதுடெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வக்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் நிறைவு பெறவுள்ள நிலையில் காங்கிரஸ் ஆலோசனை நடத்துவது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதில் பல தரப்பிலிருந்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது.
English Summary
Congress MP meet tomorrow under leadership Rahul Gandhi