கடலூரில் கள்ளநோட்டு அச்சடிப்பு - குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு.!!
special guard form for fake notes case
கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்த இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் காவல் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் செல்வம் வீட்டிற்கு சென்றனர்.
இதையறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடியது. சந்தேகமடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, போலீசார் செல்வத்தின் வீட்டிற்கு வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் ஓட்டுநராக வேலை செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
special guard form for fake notes case