பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கிச்சா சுதீப்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஸ்டேக்.!
Twitter trend opposite to kicha sudeep
கன்னட சினிமாவின் பிரபலமான நடிகரான கிச்சா சுதீப் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களை கொண்டவர். நான் ஈ மற்றும் பாகுபலி ஆகிய திரைப்படங்கள் இவரது நடிப்பில் பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.
வருகின்ற மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. பாஜக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜடாத தளம் வாங்கிய கட்சிகள் கர்நாடக அரியணையை கைப்பற்ற கடுமையான போட்டியில் இருக்கின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிரபல கன்னட நடிகரான சுதீப் கிச்சா பாஜகவில் சேர இருந்தார். இந்நிலையில் மர்ம நபரிடம் அவரது அந்தரங்க வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டல் கடிதம் வந்ததை தொடர்ந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அது தொடர்பாக பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார் சுதீப் கிச்சா.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், "மிரட்டல் கடிதத்தை பெற்றுக் கொண்டேன் இதை யார் எனக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று தெரியும். சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தான் எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். வெகு விரைவில் அவர்களுக்கான பதிலடி கொடுப்பேன். கடினமான நேரங்களில் என்னுடன் இருந்தவர்களை என்றுமே மறக்க மாட்டேன். நான் பிஜேபிக்காக தேர்தல் பிரச்சாரம் தான் செய்யப் போகிறேன் எலெக்ஷனில் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரபல கர்நாடக நடிகர் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில் #WeDon'tWantKicchaInPolitics ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
English Summary
Twitter trend opposite to kicha sudeep