அயலி பட இயக்குனரை பாராட்டி, உதயநிதி கொடுத்த ஸ்பெஷல் பரிசு.!
Udhayanithi Stalin about ayali series
கோலிவுட் திரையுலையில் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை தவிர்த்து வெப் சீரிஸ்க்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வெப் சீரிஸ்கள் பெரிதாக பேசப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது முத்துக்குமார் இயக்கிய அயலி என்ற வெப் சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்து பொருளாக பேசப்பட்டு உள்ளது.
Estrella stories தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அபி நக்ஷத்ரா, அனுமொள், மதன், லிங்கா, சிங்கம் புலி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரேவா என்பவர் இசையமைத்து வினை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து அயலி சீரியஸின் திரைக்கதையை எழுதி உள்ளனர். இந்த சீரியஸ் ஸீ 5 வலைத்தளத்தில் 26 ஆம் தேதி ஜனவரி மாதம் வெளியானது.
அயலி வெப் சீரியஸ் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பேசப்பட்டு வருவதற்கு காரணம் இந்த சீரியல் பெண்களின் கல்வி, குழந்தை திருமண முறை போன்றவற்றை மையமாக வைத்து பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையாகும். இந்த படத்தில் அபி நட்சத்திரா நடித்திருக்கும் தமிழ்ச்செல்வி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இந்த 'அயலி' பட சீரிஸை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
அதில், "ஜீ5 தள வெப் சீரிஸ்.
வயதுக்கு வந்ததை மறைத்து, மருத்துவர் கனவோடு படிக்கும் மாணவியின் கதை.
குழந்தை திருமணத்துக்கு எதிரான, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று.
இப்பட இயக்குநர் முத்துக்குமாருக்கு பெரியார் சிலை அளித்து பாராட்டினேன்." என டிவிட்டரில் தெரிவித்து இருக்கின்றார்.
English Summary
Udhayanithi Stalin about ayali series