நைஸாக பேசி நக்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் ஆட்டையை போட்ட மர்ம நபர்.!  - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர்  நடிகை நக்மா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவின் சகோதரி ஆவார். ஷங்கரின் காதலன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது சினிமாவிலிருந்து விலகி ஆன்மீகம், அரசியல் என மற்ற தளங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது வங்கி அதிகாரி போல நடித்து  நக்மாவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மர்ம நபர் ஒருவர் வங்கி அதிகாரி போல பேசி ஒரு லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நக்மாவின் தொலைபேசிக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதனை அவர் கிளிக் செய்த போது மர்ம ஆசாமி ஒருவர் நக்மாவின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். தன்னை வங்கி அதிகாரியான அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய அந்த நபர் நக்மாவினுடைய கே.ஒய்.சி தகவல்களை புதுப்பிக்க உதவுவதாக கூறியிருக்கிறார்.

அவருடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கிக் கணக்கில் இருந்து 99,998  ரூபாய் மாயமாகி இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மும்பை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

unidentifed persons scams rupees one lakh from nagma


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->