வடிவேலுவுடன் குத்தாட்டம் போட்ட விக்ரம் பட நடிகை.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி நடிகர் வடிவேலுவுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனவாக நடித்த வசந்தி, காமெடி நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்துள்ளார். 

அப்போது வடிவேலு நடித்த 'மனதை திருடி விட்டாய்' என்ற திரைப்படத்தில் வரும் பிரபல காமெடி காட்சியான எங்க அப்பா வாசிக்க.. எங்க அம்மா ஆட.. நானும் எங்க அண்ணனும் வேடிக்கை பார்க்க ஒரே கூத்தாக இருக்கும் என்ற காமெடி காட்சிக்கு தற்போது இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu and agent Dina dance video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->