அடடே.. வடிவேலு மிஸ் பண்ணிய படத்தில் விஜய் நடித்தாரா.? நம்பவே முடியல.! ஆனால், உண்மை.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென ஒரு பாணி அமைத்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ராஜ்கிரன் தான் வடிவேலுவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

தனது நடிப்பு திறமையின் மூலம் காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார் வடிவேலு. இந்நிலையில் வடிவேலுவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்திருக்கிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்தத் திரைப்படம் தான் விஜயின் கேரியரில் ஹைலைட்டாக அமைந்தது என்றால் மறுக்க முடியாது. விஜய் ஒரு ஆக்சன் மாஸ் ஹீரோவாக மட்டுமில்லாமல் அமைதியான ஒரு இளைஞனாகவும் இந்த படம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனரான எழில். இந்தப் படத்தில் முதலில் வடிவேலு தான் ஹீரோவாக நடிக்க இருந்தார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?

வடிவேலுவின் நண்பரான எழில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கதையை முதலில் வடிவேலுவிடம் தான் கூறியிருக்கிறார். வடிவேலுவும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து முரளியிடமும் கால்ஷீட்டுக்காக கேட்டிருக்கிறார் எழில்? அவரும் மற்ற பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக தளபதி விஜயை வைத்து அந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக இயக்கினார் எழில்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu missed thullatha manamum thullum movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->