தனது புதிய படத்தில் பாடகராகும் வடிவேலு.. இசையமைப்பாளர் கொடுத்த அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாவது பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன்பின் படக்குழுவினருடன்  ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் நடிகர் வடிவேலு இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு ரெட் கார்ட் தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்திற்காக நடிகர் வடிவேலு ஒரு ட்ராப் சாங் படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadivelu sings a song in naay sekar returns


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->