பொங்கலுக்கு வாரிசா? துணிவா? கலகலப்பாக நடிகர் வடிவேலு கூறிய பதில்! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

அதுபோல நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்குகின்ற திரைப்படம் தான் துணிவு. இந்த படத்தின் சூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதன் போஸ்டர்கள் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இந்தப் படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அஜித் ரசிகர்களிடையே எந்த படம் வெற்றி பெறும் என கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், மனதிற்கு கஷ்டமாக இருந்தால்  திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தால் அவை நீங்கிவிடும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வாரிசா? துணிவா? பொங்கலுக்கு முதலில் எந்த படம் முதலில் பார்ப்பீர்கள் என்று செய்தியாளர் வடிவேலுவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர் 2 படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். தமிழ் சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu speech about varisu and Thunivu movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->